ஆரல்வாய்மொழியில் வீட்டுக்குள் பதுங்கிய பாம்பு பிடிபட்டது


ஆரல்வாய்மொழியில் வீட்டுக்குள் பதுங்கிய பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 25 March 2022 11:09 PM IST (Updated: 25 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் வீட்டுக்குள் பதுங்கிய பாம்பு பிடிபட்டது

ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழி வடக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன் என்ற தளவாய் (வயது 70). இவர் வீட்டில் இருந்த போது ஜன்னலில் ஏதோ விழும் சத்தம் கேட்டது. உடனே, அவர் அங்கு பார்த்தபோது, பாம்பு ஒன்று வீட்டுக்குள் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டில் உள்ளவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். பின்னர், இதுபற்றி ஆரல்வாய்மொழியில் உள்ள பூதப்பாண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனகாப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆல்வின் ஆகியோர் வந்து வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு கொடிய விஷம் உடையது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர், அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Next Story