வேலூர் அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்த


வேலூர் அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்த
x
தினத்தந்தி 25 March 2022 11:14 PM IST (Updated: 25 March 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வேலூர்

வேலூர் பாகாயம் மேட்டுஇடையம்பட்டியில் பள்ளி மாணவிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து சைல்டுலைன் அணி உறுப்பினர்கள் நாகப்பன், சத்யா, சமூக நலத்துறை ஊழியர்கள் பரிமளா, கல்யாணி மற்றும் பாகாயம் போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரித்தனர். 

அப்போது, லத்தேரியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 17 வயது மாணவிக்கும், மேட்டுஇடையம்பட்டியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த திருமணத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் மாணவியின் பெற்றோரிடம் 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டனர். 

தொடர்ந்து அந்த மாணவியை மீட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்தனர்.

Next Story