ஊரடங்கில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் குறித்த ஆவணப்படம்


ஊரடங்கில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் குறித்த ஆவணப்படம்
x
தினத்தந்தி 25 March 2022 11:26 PM IST (Updated: 25 March 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் கல்வித்துறை சார்பில், ஊரடங்கில் சிறப்பாக பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

பழனி: 

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடி இருந்தன. மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காமல் இருக்க கல்வித்துறை சார்பில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா விதிகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தினர்.

இதையடுத்து கல்வித்துறை சார்பில், ஊரடங்கில் சிறப்பாக பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பழனி கடைவீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோகிலவாணி சிறப்பாக பணியாற்றியது குறித்து ஆவணப்படம்  எடுக்கப்பட்டது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் முருகன் தலைமையிலான குழுவினர் பழனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்களின் கருத்துகளை கேட்டு பதிவு செய்தனர். அப்போது வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், ஆனந்தன், ரமேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் முருகன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, வடமதுரை, வில்பட்டி உள்பட 7 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டது குறித்து ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆவணப்படம் சென்னையில் உள்ள மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆவணப்படங்கள் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும்போது திரையிடப்பட்டு கற்றல் திறன் மேம்பாடு குறித்து வகுப்பு எடுக்கப்பட உள்ளது என்றார்.

Next Story