சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் அருகே சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா? என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சீர்காழி:
திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் அருகே சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா? என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சிவலோகநாதர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூர் கிராமத்தில் சிவலோகநாதர் கோவில் உள்ளது. நந்தனாருக்காக நந்தி விலகிய தலம் என்ற சிறப்புடைய இக்கோவிலில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. பிரசித்திப்பெற்ற இக்கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு நடைபெறும் பிரதோஷ வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த கோவில் முன்பு பக்தர்கள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இவை பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொது சுகாதார வளாகம் மற்றும் குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பயன்பாட்டுக்கு
வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். திறந்த வெளியை கழிவறைபோல் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சிவலோகநாதர் கோவில் முன்பு உள்ள பொது சுவாதார வளாகம் மற்றும் குடிநீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story