தந்தையை இழந்த மாணவனுக்கு அரசு கல்வி உதவித்தொகை


தந்தையை இழந்த மாணவனுக்கு அரசு கல்வி உதவித்தொகை
x
தினத்தந்தி 25 March 2022 11:32 PM IST (Updated: 25 March 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

தந்தையை இழந்த மாணவனுக்கு அரசு கல்வி உதவித்தொகையை ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் வழங்கினார்.

ஆரணி
தந்தையை இழந்த மாணவனுக்கு அரசு கல்வி உதவித்தொகையை ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் வழங்கினார்.

ஆரணியை அடுத்த குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கிரி என்ற மாணவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் மேல் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2018-ம் ஆண்டு படித்து வந்தபோது  தந்தை இறந்து விட்டார். வருவாய் ஈட்டும் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் உதவித்தொகையாக தலா ரூ.75 ஆயிரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதன்படி குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் கிரியிடம் மேற்கண்ட உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் ஜி.சந்தோஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவனின் தாயார் கீதாவும் கலந்து கொண்டார்.அப்போது மேல் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் அருளரசு, பள்ளி துணை ஆய்வாளர் பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story