கச்சிராயப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் ஒருவர் கைது
கச்சிராயப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் ஒருவர் கைது
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவார்.
நேற்று காலையில் வழக்கம்போல் தனது கிராமத்தில் இருந்து தனியார் பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 58 வயது மதிக்கத்தக்க ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் எழுப்பினார். உடனே பஸ்சில் இருந்த சக பயணிகள் அவரை பிடித்து கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் மண்மலை கிராமத்தை சேர்ந்த பெரியான் மகன் ராஜேந்திரன்(வயது 58) என்பதும், மாணவியிடம் சில்மிஷம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஓடும் பஸ்சில் 9-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் கச்சிராயப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
Related Tags :
Next Story