விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம்


விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 25 March 2022 11:34 PM IST (Updated: 25 March 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம்

திருத்துறைப்பூண்டி;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 16 அடி உயரத்தில் விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். இவருக்கு 29-வது ஆண்டு பிரதிஷ்டை திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு பக்தர்கள் திருத்துறைப்பூண்டி ராமர் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்துக்காண்டு பல்வேறு வீதிகள் வழியாக கோவிலுக்கு  ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து 16 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிங்காரவேலு, தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர். 

Next Story