புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 March 2022 11:39 PM IST (Updated: 25 March 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டியில் மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு

குடிநீர் வசதி வேண்டும்
மன்னார்குடி தாலுகா கோவில் களப்பாள் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால் இந்த தொட்டியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் விளக்குகள் எரியுமா?
நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் கீச்சாங்குப்பம் என்ற கிராமம் உள்ளது. இதன் அருகே மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக எரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே மேம்பாலத்தில் மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முத்தையன் நாகப்பட்டினம்.

Next Story