மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் ஆர்ப்பாட்டம்


மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 11:54 PM IST (Updated: 25 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 187 ஆய்வக நுட்புனர் நிலை-2 பணியிடங்களை காலமுறை பணியிடங்களாக மாற்றி மருத்துவ தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். ஆய்வக நுட்புனர் கவுன்சிலை நடைமுறைப்படுத்த வேண்டும். 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள தலைமை ஆய்வக நுட்புனர் பதவியை உருவாக்கிட வேண்டும்.

ஒரு ஆய்வக நுட்புனர் மட்டும் பணிபுரியும் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் ஆகிய ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக ஆய்வக நுட்புனர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கத்தினர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன் விளக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக அரசு ஊழியர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் காசிநாதன், சுந்தர் ராஜா, பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் ரவி நன்றி கூறினார்.

Next Story