ஜோலார்பேட்டை அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
ஜோலார்பேட்டை அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் பஞ்சாயத்துக்குட்பட்ட சில்கூர் ஏரி சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஆண்டுதோறும் இந்த ஏரி மீன் பிடிப்பதற்காக ஏலம் விடப்பட்டு வந்த நிலையில், இந்த வருடத்திற்கான ஏலம் இன்று (சனிக்கிழமை) விடப்பட இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை சில்கூர் ஏரியில் சுமார் 200 கிலோ எடையுள்ள மீன்கள் செத்து மிதந்தன.
இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் நிர்மலா சஞ்சய் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார் கொடுத்தார். அதில் சுமார் 200 கிலோ மீன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தததாக கூறி உள்ளார்.
புகாரின்பேரில் ஏரியில் மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story