கர்நாடக அரசு பஸ் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் விவசாயி சாவு


கர்நாடக அரசு பஸ் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் விவசாயி சாவு
x
தினத்தந்தி 26 March 2022 12:00 AM IST (Updated: 26 March 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே எதிரே வந்த கர்நாடக அரசு பஸ் மீது பசுமாட்டை ஏற்றிச்சென்ற சரக்கு வேன் மோதி கவிழ்ந்தது. இதில் பசுவுடன் அதன் உரிதமயாளரும் அதே இடத்தில் இறந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே எதிரே வந்த கர்நாடக அரசு பஸ் மீது பசுமாட்டை ஏற்றிச்சென்ற சரக்கு வேன் மோதி கவிழ்ந்தது. இதில் பசுவுடன் அதன் உரிதமயாளரும் அதே இடத்தில் இறந்தார்.

சிகிச்சை அளிக்க... 

திருவண்ணாமலை அருகில் உள்ள பாலியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஓம்சக்தி (வயது 26), விவசாயி. இவர் வளர்த்து வந்த பசு மாடு ஒன்றிற்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டதால் அதை சரக்கு வேனில் ஏற்றி கொண்டு திருவண்ணாமலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை அளித்தபின அதே வேனில் ஏற்றிக்கொண்டு அதனுடன் பின்னால் அமர்ந்தவாறு ஓம்சக்தி திரும்பிக்கொண்டிருந்தார்.

வேனை டிரைவர் சம்பத் ஓட்டினார. அவருடன் மற்றும் ஜெயராமன், ஆதிகேசவலு ஆகிய 2 பேர் அமர்ந்திருந்தனர்.
ஒட்டகுடிசல் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது எதிரே வந்த கர்நாடக அரசு பஸ்சின் மீது எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது. இதனால் வேனின் பின்புறத்தில் இருந்த ஓம்சக்தியும், பசு மாடும் கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

விசாரணை

மேலும் வேன் டிரைவர் உள்பட 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஓம்சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பசு மாட்டையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story