சிறப்பு துப்புரவு விழிப்புணர்வு முகாம்
காரைக்குடி நகராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடி நகராட்சி சார்பில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமுதப்பெருவிழா எனும் சிறப்பு துப்புரவு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. அதனையொட்டி செக்காலைப்பகுதியில் சாலைகளை நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியினை நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அருணாச்சலம் செட்டியார் தெருவில் மழைநீர் வடிகால் கால்வாயை சுத்தம் செய்தனர்.பின் ஆலங்குடியார் வீதியில் உள்ள வீடுகளில் காய்கறி கழிவுகளை கொண்டு உரமாக்கி செடி வளர்க்கும் முறைகளை பார்வையிட்டு நகராட்சி அதிகாரிகள் ஊக்கப்படுத்தி பாராட்டினர். பின்னர் சிதம்பரம் தெருவில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசை நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை வழங்கினார். நிகழ்ச்சிகளில் நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி என்ஜினீயர் கோவிந்தராஜன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story