திருப்பத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மோட்டார்சைக்கிள் ஓட்டிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
திருப்பத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா மோட்டார்சைக்கிள் ஓட்டிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா மோட்டார்சைக்கிள் ஓட்டிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பத்தூரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து இருச்சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
தூயநெஞ்சக் கல்லூரியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் காந்தி சிலை வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தது. இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஹெல்மெட் அணிந்து கொண்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் சாராயம் மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், கண்பார்வை இழப்பு, நிரந்தர உடல் பாதிப்பு, உடல் ஊனம், நினைவாற்றல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு தீமைகளிலிருந்து விடுபட போதைப் பொருட்களை ஒழிப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சிறைத்தண்டனை
அப்போது கலெக்டர் பேசுகையில் போதைப் பொருட்களை கடத்துவதோ, வைத்திருப்பதோ, விற்பதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் உண்டு என தெரிவித்தார்.
ஊர்வலத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், உதவி ஆணையர் (கலால்) பானு, நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story