நகையை திருடியவர் கைது
காரைக்குடியில் நகையை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி அம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 49). இவர் தன்னுடைய வைரக்கற்கள் பதித்த 2¾ பவுன் எடையுள்ள சங்கிலியை நகைக்கடையில் கொடுத்துவிட்டு புதிய நகை வாங்க திட்டமிட்டார். இதற்காக தனது தங்கையோடு நகைக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.செல்லும் வழியில் அம்பேத்கர் சிலை அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தனது தங்க சங்கிலியை வாகனத்தின் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தின் பெட்டியை திறந்து அதில் உள்ள தங்க சங்கிலியை ஒருவர் எடுப்பதைப்பார்த்து புவனேஸ்வரி சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருடப்பட்ட தங்க சங்கிலி மீட்கப்பட்டது. வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் லட்சுமி நகரைச் சேர்ந்த சாரதிராமன் (வயது 50) என தெரியவந்தது அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story