இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர் ஜாமீன் ேகட்டு மனு
இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர் ஜாமீன் ேகட்டு மனு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 4 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இதுதொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த 8 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மாடசாமி என்பவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
Related Tags :
Next Story