தக்காளி, வெங்காயத்திற்கு நிரந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


தக்காளி, வெங்காயத்திற்கு நிரந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 March 2022 12:38 AM IST (Updated: 26 March 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

தக்காளி, வெங்காயத்திற்கு நிரந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர்

தக்காளி, வெங்காயத்திற்கு நிரந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வேளாண்மை இணை இயக்குநர் கி.ராஜசேகர், தோட்டக்கலை துணை இயக்குநர் ஏ.ஜி.பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் களந்துகொண்டு பேசினர். அப்போது  விளை நிலங்களை காட்டுப் பன்றிகள், குரங்குகள், யானைகள் நாசம் செய்கின்றன. அதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். சாலை நகர் முதல் வெங்காயப்பள்ளி வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் விளை பொருள்களை கொண்டு செல்வது சிரமமாக உள்ளது. 

மின் மோட்டாருக்கு ரூ.10 ஆயிரம் அரசு தரப்பில் மானியம் தரப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட கடைகளில் வாங்க சொல்வதும், குறிப்பிட்ட விலைகளில் வாங்க சொல்வதும் தவிரத்து, நாங்கள் வாங்கும் மின்மோட்டாருக்கு மானியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக தோட்டக்கலைத் துறையினர் கிராமப்பகுதிகளுக்கு வருவதே இல்லை. அவர்கள் வருகை தந்து எங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.

நிரந்தர விலை நிர்ணயம்

அந்தந்த தாலுகா அலுவலகலத்திலேயே விவசாயிகள் குறைதீர் முகாம் நடத்தினால் பெருமளவு போக்குவரத்து சிரமம் குறையும். ஜோலார்பேட்டை பகுதியில் உழவர் சந்தை அமைத்து தரவேண்டும். தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்தால் பாராளுமன்றம் வரை பேசப்படுகிறது. ஆனால் தற்போது தக்காளி, வெங்காய விலை படு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசுகையில் சாலை வசதி குறைபாடுகள், ஆகஸ்ட் மாதத்திற்குள் தீர்க்கப்படும். மின் மோட்டார் மானியம் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூரில் புதிதாக உழவர் சந்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story