வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு


வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 26 March 2022 12:39 AM IST (Updated: 26 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் மேற்பார்வையில், வாணியம்பாடி- ஆலங்காயம் செல்லும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
மேலும் தேவையற்ற விபத்துகளை தவிர்ப்பது எவ்வாறு எனவும், போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் வாணியம்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். 

மேலும் சாலையில் செல்லும் போது பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Next Story