வீடுகளை இடித்து விட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு


வீடுகளை இடித்து விட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 March 2022 1:02 AM IST (Updated: 26 March 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளை இடித்து விட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராஜபாளையம்,
வீடுகளை இடித்து விட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். 
விளையாட்டு மைதானம் 
ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் 54-ம் ஆண்டு வரை 3 பிரிவுகளாக நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இங்குள்ள 71 வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானத்தில் தற்போது, மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. வாலிபர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறிய நிலையில் இது வரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் குடியிருப்பை ஒட்டிய பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
போராட்டம் 
இதற்காக நிலம் அளவீடு செய்யும் போது, அப்பகுதியில் உள்ள காலி நிலம் பயன்படுத்தப்படுவதோடு, சில வீடுகளின் ஒரு பகுதியும் இடிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாக பொது மக்கள் தெரிவித்தனர்.
நகராட்சி குடியிருப்பு அருகே உள்ள அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை அகற்றாமல், வீடுகளை இடித்து ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனவேங்கைகள் மற்றும் தமிழ்புலிகள் கட்சியுடன் இணைந்து, பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகிேயார் பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கும், அவர்களது குடியிருப்புகளுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. அளித்த உறுதியை அடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story