கலவை அருகே திருநீலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


கலவை அருகே திருநீலகண்டேஸ்வரர் கோவில்  கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 26 March 2022 1:11 AM IST (Updated: 26 March 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே திருநீலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கலவை

கலவையை அடுத்த அல்லாளச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த நீலமேனி வாலிழையம்மன் சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மூன்று கால யாக பூஜையில் கணபதி ஹோமம், கோபூஜை, சண்டீஸ்வரர் நவகிரக பூஜை செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் காலை 10 மணி அளவில் நீலகண்டேஸ்வரர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து முருகன், கணபதி, துர்க்கை அம்மன், நவகிரகம், பைரவர், சனீஸ்வரர், குருபகவான் போன்ற கடவுள்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.

இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.  நிகழ்ச்சியை சென்னையை சேர்ந்த பரம்பரை மணியம் சீனிவாசன், சம்பத் ஐயங்கார், செல்வம் ஆகியோர் முன்னின்று நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ரிஷப வாகனத்தில் திருநீலகண்டேஸ்வரர் நகர வீதியில் வாணவேடிக்கை, சிவனடியார் தொண்டர்கள் மூலம் பம்பை உடுக்கையுடன் வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story