கரூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம்


கரூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 1:11 AM IST (Updated: 26 March 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.

கரூர், 
அ.தி.மு.க. அமைப்பு தேர்தலானது தமிழகம் முழுவதும் இரு கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் உள்பட 25 மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
மேலும் கரூர் மாவட்டத்திற்கு அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் வரகூர் அ.அருணாச்சலமும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அமைப்பு தேர்தல் குறித்து கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைப்பு தேர்தலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றியும், தொண்டர்கள் அமைப்பு தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story