காலில் அடிபட்டு உயிருக்கு போராடிய மயில் மீட்பு


காலில் அடிபட்டு உயிருக்கு போராடிய மயில் மீட்பு
x
தினத்தந்தி 26 March 2022 1:13 AM IST (Updated: 26 March 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

காலில் அடிபட்டு உயிருக்கு போராடிய மயில் மீட்கப்பட்டது

வடகாடு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் சத்திரம் பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி வந்த தேசிய பறவையான மயில் ஒன்று காலில் அடிபட்டு நடக்க முடியாமல் உயிருக்கு போராடியபடி நீண்ட நேரம் கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற மாதவன், நிருபன் ஆகியோர் அதனை மீட்டு அப்பகுதியை சேர்ந்த அறிவொளி கருப்பையா என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த புதுக்கோட்டை வனச்சரக ஆலங்குடி பிரிவு வனத்துறை அலுவலர்களிடம் மயில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த மயிலுக்கு வடகாடு கால்நடை மருத்துவர் ஆனந்தராஜ் சிகிச்சை அளித்தார். அதனைத்ெதாடர்ந்து வனச்சரக அலுவலகத்திற்கு அந்த மயில் எடுத்துச் செல்லப்பட்டது.


Next Story