இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேர்த்திக்கடன்
சிறப்பு வழிபாட்டில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்தும் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சாத்தூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
Related Tags :
Next Story