டிரைவரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது


டிரைவரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 1:24 AM IST (Updated: 26 March 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

டிரைவரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்

விராலிமலை
கன்னியாகுமரி மாவட்டம், அச்சன்குளத்தை சேர்ந்த குமரேசன் மகன் சுரேஷ்(வயது 35) டிரைவர். இவர் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு மீண்டும் ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் அதிகாலை சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், சுரேசை எழுப்பி அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியதோடு ஆட்டோவின் முன்புற கண்ணாடியை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதில், பயந்துபோன சுரேஷ் திருடன், திருடன் என்று சத்தமிட்டபடியே கீழே இறங்கி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அரிவாளுடன் சுேரசை விரட்டி சென்றவரை பிடித்து விராலிமலை போலீசில் ஒப்படைத்தனர்.
அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் இ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த இளஞ்சியம் மகன் சரவணகுமார்(33) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவர் ஏற்கனவே ஒரு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து சரவணகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story