மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்ததில் கீழே விழுந்தவர் சாவு
மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்ததில் கீழே விழுந்தவர் உயிரிழந்தார்
கந்தர்வகோட்டை
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரை சேர்ந்த பெரியசாமி மகன் மகேந்திரன் (வயது 24). அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அரவிந்த்(23). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கல்லணையில் மீன் பிடித்துக் கொண்டு கந்தர்வகோட்டையில் விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கந்தர்வகோட்டை வடுகபட்டி நண்பன் பண்ணை அருகே அவர்கள் வந்தபோது மோட்டார் சைக்கிளின் பின்புற டயர் திடீரென வெடித்ததில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் மகேந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story