பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்


பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 March 2022 1:52 AM IST (Updated: 26 March 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பா.ஜ.க.வினர் உண்ணாவிரத ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆலங்குடி
ஆலங்குடி டவுனில் அமைந்துள்ள நாடியம்மன் கோவில் ஊரணியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்து நீண்டகாலமாக வைத்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், ஆக்கிமிப்புகளை அகற்றக்கோரியும் பள்ளத்திவிடுதி ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகேசன், பள்ளத்திவிடுதி சரவணன் சேதுரார், மேலாத்தூர் குமார் ஆகியோர் தலைமையில் நேற்று பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நீரின்றி அமையாது உலகு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். உண்ணாவிரதத்தில் புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. முன்னாள் செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
 இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கு சரியான முடிவு காணப்படாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story