நெல்லை: அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்ற பெண் சாவு


நெல்லை: அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்ற பெண் சாவு
x
தினத்தந்தி 26 March 2022 2:10 AM IST (Updated: 26 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்ற பெண் உயிரிழந்தார்

நெல்லை:
பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் மனைவி ராமலட்சுமி (வயது 33). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராமலட்சுமி வீட்டில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று விட்டு மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமலட்சுமி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story