நெல்லை: என்ஜினீயரை தாக்கி செல்போன் பறிப்பு; 4 பேர் கைது


நெல்லை: என்ஜினீயரை தாக்கி செல்போன் பறிப்பு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 2:26 AM IST (Updated: 26 March 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரை தாக்கி செல்போன் பறிப்பு -4 பேரை போலீசார் கைது செய்தனர்

நெல்லை:
நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 25). என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் வெள்ளக்கோவில் அருகே ஆற்றுப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி செல்போனை பறித்து சென்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த ஷியாம் சுந்தர் (32), செல்வம் (34), தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த மாரியப்பன் (35), ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (34) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஷியாம் சுந்தர் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது.

Next Story