மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசார் சிலம்பூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி அதில் வந்தவரிடம் விசாரித்தபோது, கடலூர் மாவட்டம் தெத்தேறியில் உள்ள வெள்ளாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி, ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, அந்த நபரை ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். ஆண்டிமடம் - விருத்தாச்சலம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது யாரும் எதிர்பாராத நிலையில் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர், வண்டியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் மணலுடன் இருந்த மாட்டு வண்டியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி மாட்டி வண்டியை ஓட்டி வந்த குறிச்சிக்குளத்தை சேர்ந்த ராஜேஷ், உரிமையாளர் இளங்கோமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story