இடப்பிரச்சினையில் மோதல்; பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு


இடப்பிரச்சினையில் மோதல்; பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 March 2022 2:51 AM IST (Updated: 26 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

இடப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த பஞ்சநாதனின் மனைவி ஜானகி(வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(60). இவர்கள் குடும்பத்திற்கு இடையே கடந்த 10 ஆண்டாக இடப் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் தமிழரசன்(29) ஆகியோர் ஜானகி வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஏன் இப்படி திட்டுகிறீர்கள் என்று கேட்டபோது, அருகில் இருந்த இரும்பு குழாயால் தமிழரசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஜானகி மற்றும் அவரது மகள் வெள்ளையம்மாள் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜானகி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே சம்பவத்தில் ஜானகி, அவரது மகள் வெள்ளையம்மாள், சக்கரவர்த்தி, கண்மணி ஆகியோர் தகாத வார்த்தைகளால் தமிழரசனை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தமிழரசனுக்கு காயம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தமிழரசன் கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story