மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்


மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2022 2:51 AM IST (Updated: 26 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வக்கு, அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றி அவர், விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு குமணந்துறை பகுதிக்கு சென்ற மாட்டு வண்டியை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் மாட்டு வண்டியை ஓட்டி வந்த நபர், சாலையின் ஓரமாக மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மாட்டு வண்டியை சோதனை செய்தபோது அதில் கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.

Next Story