நாகர்கோவிலில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 2:55 AM IST (Updated: 26 March 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ரெயில்வே ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் ரெயில்வே ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
ரெயில்வே அதிகாரிகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து எஸ்.எம்.ஆர்.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலைய பகுதியில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.எம்.ஆர்.யு. கிளை தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பால் பாண்டியன் வரவேற்று பேசினார். கோட்ட தலைவர் சுனில்குமார், முன்னாள் உதவி கோட்ட பொறியாளர் சசி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் கிளை பொருளாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story