மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் மாற்றி அமைப்பு


மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் மாற்றி அமைப்பு
x
தினத்தந்தி 26 March 2022 3:00 AM IST (Updated: 26 March 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை
மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றம்
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நீதிபதிகள் சுழற்சி முறையில் மாற்றப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் மதுரை ஐகோர்ட்டில் தற்போது பணியாற்றி வரும் நீதிபதிகள் அடுத்த மாதம் வரை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் தற்போதைய நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இலாகாக்கள் சார்ந்த வழக்கு விசாரணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பொதுநல வழக்குகள்
வருகிற 28-ந்தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் விவரம் வருமாறு:-
முதல் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் ஆகியோர் பொதுநல வழக்குகள் மற்றும் பிற ரிட் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனர். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோர் ஆட்கொணர்வு மனுக்கள், அனைத்து கிரிமினல் அப்பீல் மனுக்கள், பிற கிரிமினல் வழக்குகள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் உள்பட) 2017-ம் ஆண்டு வரை தாக்கலான ரிட் அப்பீல், பிற சிவில் அப்பீல் மனுக்களை விசாரிக்கின்றனர்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 2015-ம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் உள்ள 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.
நீதிபதி டீக்காராமன், சிவில் சிறு அப்பீல் மனுக்கள், சிவில் 2-வது அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தாக்கலான 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.
நிலச்சட்டம்
நீதிபதி அப்துல்குத்தூஸ், 2017-ம் ஆண்டு முதல் தாக்கலான பொது சிறு வழக்குகள், கனிமங்கள் மற்றம் தாதுக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள், நிலச்சீர்திருத்தம், நில குத்தகை உள்பட நிலச்சட்டங்கள் தொடர்பான வழக்குகள், சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் வழக்குகள், விவசாய உற்பத்தி சந்தை சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கிறார்.
நீதிபதி ஆர்.தாரணி, 2009-ம் ஆண்டு வரை தாக்கலான 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன், குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவுகள் 407, 482-ன் கீழ் கடந்த 2020-ம் ்ஆண்டு முதல் தாக்கலான கிரிமினல் வழக்குகள், ரிட் மனுக்கள், கிரிமினல் அப்பீல் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அப்பீல் உள்பட), 2020-ம் ஆண்டில் இருந்து தாக்கலான கிரிமினல் ரிவிஷன் மனுக்களை விசாரிக்கிறார்.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 2019-ம் ஆண்டில் இருந்து தாக்கலான தொழிலாளர் மற்றும் சேவை சம்பந்தப்பட்ட ரிட் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி சி.சரவணன், வரி, மோட்டார் வாகன வரி, ஏற்றுமதி-இறக்குமதி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், தொழில்துறை, அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறார்.
சி.பி.ஐ.
நீதிபதி புகழேந்தி, கடந்த 2016-ம் ஆண்டு வரை தாக்கலான கனிமம் மற்றும் தாதுக்கள், நிலச்சீர்திருத்தம், நில குத்தகை, நிலம் கையகப்படுத்துதல், நிலச்சட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், விவசாய உற்பத்தி சந்தை, சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கிறார்.
நீதிபதி இளங்கோவன், சி.பி.ஐ., ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளையும் (முன்ஜாமீன், ஜாமீன் மனுக்களை தவிர), 2019-ம் ஆண்டு வரை குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்கீழ் தாக்கலான கிரிமினல் ஒரிஜினல், ரிட் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி ஆனந்தி, சிவில் ரிவிஷன் மனுக்கள், நிறுவன அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.
நீதிபதி முரளிசங்கர், முன்ஜாமீன், ஜாமீன் சம்பந்தப்பட்ட மனுக்களையும், கிரிமினல் அப்பீல் மனுக்களையும், 2019-ம் ஆண்டு வரை தாக்கலான கிரிமினல் ரிவிஷன் மனுக்களையும் விசாரிக்கிறார்.
நீதிபதி மஞ்சுளா, முதல் அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி ஸ்ரீமதி, 2018-ம் ஆண்டு வரை தாக்கலான தொழிலாளர் மற்றும் சேவை சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கிறார்.
இந்த தகவலை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

Next Story