ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 3:00 AM IST (Updated: 26 March 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை
மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 234 பெண் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற உள்ள பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதற்காக மதுரையில் உள்ள கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் அலுவலகத்தில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் தடையில்லா சான்று வழங்கப்படவில்லை., இதையடுத்து நேற்று மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இணை இயக்குனர் செல்வராஜை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.  இரவிலும் அவர்கள் ெதாடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story