நாகர்கோவிலில் 1½ கிேலா கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது


நாகர்கோவிலில் 1½ கிேலா கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 3:00 AM IST (Updated: 26 March 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 1½ கிேலா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் 1½ கிேலா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா பறிமுதல்
நாகர்கோவில் கோதை கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் கோதை கிராமம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு அம்மன்கோவில் அருகே 5 பேர் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடினார். மற்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, 1½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
விசாரணையில், அவர்கள் கோட்டார் வாகையடி தெற்கு ரதவீதியை சேர்ந்த சதீஷ் (வயது 20), கோட்டாரை சேர்ந்த ரங்கநாதன் (22), ஸ்ரீவாசன் (20), மகேஷ் (20) என்பதும் இவர்கள் அந்தபகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரை போலீசார் கைது செய்து, 1½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

Next Story