தொலைந்து போன 117 செல்போன்கள் மீட்பு


தொலைந்து போன 117 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 26 March 2022 3:01 AM IST (Updated: 26 March 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

தொலைந்து போன 117 செல்போன்கள் மீட்கப்பட்டது

மதுரை
மதுரையில் கடந்த சில மாதங்களில் பதிவான செல்போன் திருட்டு வழக்குகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 117 செல்போன்கள் மீட்கப்பட்டன. அதனை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. அதில் போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கத்துரை, ராஜசேகரன் ஆகியோர் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார்கள். பின்னர் அவர்கள் கூறும்போது, நகரில் செல்போன் திருட்டு போனாலோ அல்லது தொலைந்தாலே உடனடியாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் கொடுக்கும்பட்சத்தில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story