நீதிமன்ற ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக நெடுஞ்சாலைத்துறை பெண் உதவிப்பொறியாளர் கைது
நீதிமன்ற ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக நெடுஞ்சாலைத்துறை பெண் உதவிப்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
பவானி
நீதிமன்ற ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக நெடுஞ்சாலைத்துறை பெண் உதவிப்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
உதவிப்பொறியாளர்
ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையம் எஸ்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி சந்திரா (வயது 55). இவர் கடலூர் நெடுஞ்சாலைத்துறையில் உதவிப்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய தாத்தா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் தொடர்பான வழக்கு பவானி உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சந்திராவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்திரா தீர்ப்பை திருத்தி வழங்க வேண்டும் என்று பவானி உரிமையியல் நீதிமன்றத்தில் பலமுறை விண்ணப்பம் செய்துள்ளார்.
மிரட்டல்-கைது
விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட நீதிமன்ற அலுவலர்கள் இது தொடர்பாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று சந்திராவுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் சந்திரா தொடர்ந்து மனுகொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் சம்பவத்தன்று நீதிமன்ற ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பவானி உரிமையியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் சாந்தி பவானி போலீசில் சந்திரா மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திராவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story