கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி உள்ளதாக கூறி ரோட்டில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
சத்தியமங்கலம் அருகே கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி உள்ளதாக கூறி ரோட்டில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி உள்ளதாக கூறி ரோட்டில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த வேடசின்னனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் அந்த பகுதியை சேர்ந்த 450-க்கும் மேற்பட்டவர்கள் நகைக்கடன் பெற்று உள்ளார்கள். கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நகைக்கடன் பெற்றவர்கள் வேடசின்னனூரில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி உள்ளனர். அப்போது நகைக்கடன் தள்ளுபடி 91 பேர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு தகுதி இல்லை என கூறப்பட்டதாக தெரிகிறது.
இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து நகைக்கடன் தள்ளுபடி செய்ததில் குளறுபடி ஏற்பட்டு உள்ளதாக கூறி நேற்று மாலை 5 மணி அளவில் சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கற்களை வைத்தும், மோட்டார்சைக்கிளை நிறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாைல மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது ெபாதுமக்களிடம் போலீசார் கூறுகையில், ‘கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகுதி உடையவர்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுைடய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு 6 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story