கே.என்.பாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது


கே.என்.பாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 3:35 AM IST (Updated: 26 March 2022 3:35 AM IST)
t-max-icont-min-icon

கே.என்.பாளையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

டி.என்.பாளையம்
கே.என்.பாளையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டு துப்பாக்கி
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்துள்ள கே.என்.பாளையம் அருகே உள்ள பெரும்பள்ளம் முயல் புதூர் பகுதியில் பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார்.
கைது
உடனே அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கே.என்.பாளையம் நரசாபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது27) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட அவர் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து சுமார் 150 கிராம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story