காப்பி அடித்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
காப்பி அடித்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்
பெங்களூரு: பெங்களூரு ராஜராஜேசுவரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதியின் மகன் தீரஜ் (வயது 13). இவன் ராஜராஜேசுவரிநகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளியில் தோ்வு நடைபெற்றது. அப்போது அருகில் இருந்த சக மாணவனை காப்பி அடித்து தீரஜ் தோ்வு எழுதியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஆசிரியர், தீரஜை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றியதுடன், அவனுடைய பெற்றோரை அழைத்து பள்ளி முதல்வர் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மாணவன் தீரஜ் வேதனை அடைந்தான். இந்த நிலையில், வீட்டுக்கு வந்த தீரஜ் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். கதவை உடைத்து உள்ளே சென்றபோது தங்களது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்கள். இதுகுறித்து ராஜராஜேசுவரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story