இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூரமங்கலம்:
சேலம் சித்தனூர் அடுத்துள்ள வட்டமுத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ரூபஸ்திரி (வயது 27). இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார், இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரூபஸ்திரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த இரும்பாலை போலீசார் ரூபஸ்திரியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story