கர்நாடகத்தில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு


கர்நாடகத்தில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 26 March 2022 4:05 AM IST (Updated: 26 March 2022 4:05 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 30 ஆயிரத்து 833 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 73 பேர் உள்ளனர். வைரஸ் தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். 

இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. 1,792 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா உயிரிழப்பு விகிதம் 4.49 ஆக உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story