லட்சக்கணக்கில் மோசடி: ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் பணிஇடை நீக்கம்
லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கன நாணய கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் சங்க தலைவர் பிரபு. இவர் கொளத்தூர் அருகே உள்ள தார்க்காடு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சங்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை லட்சக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாக இவர் உள்பட 13 பேர் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலி ரசீதுகள் மூலம் ரூ.24 லட்சத்து 91 ஆயிரத்து 980 மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிரபுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபுவை பணி இடை நீக்கம் செய்து எடப்பாடி கல்வி மாவட்ட அலுவலர் சிவானந்தம் உத்தரவிட்டு உள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளராக இருந்து சித்தி முருகன் ஏற்கனவே பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story