சுல்தான்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து கணவர் கைது


சுல்தான்பேட்டை அருகே  குடும்ப தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து கணவர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 4:47 PM IST (Updated: 26 March 2022 4:47 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல் திருமணம்

சுல்தான்பேட்டை அருகே நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 38). இவரது மனைவி சுமதி (33) டெய்லரிங் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில், முத்துராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். 
தினமும் மதுகுடித்து விட்டு வந்து அவரது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார்.  குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனை அவரின் மனைவி கண்டித்துள்ளார். 

கத்தியால் குத்தினார்

இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி சுமதியை குத்தினார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கத்தியால் குத்திய முத்துராஜை கைது செய்தார். 

Next Story