செட்டியக்காபாளையம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்


செட்டியக்காபாளையம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 26 March 2022 4:57 PM IST (Updated: 26 March 2022 4:57 PM IST)
t-max-icont-min-icon

செட்டியக்காபாளையம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.


நெகமம்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், செட்டியக்காபாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது, இந்த முகாமில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு சிகிச்சை, பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, தோல், சித்த ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இ.சி.ஜி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. ரத்த, சளி மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் 720 பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் கண் அறுவை சிகிச்சை செய்ய 10 பேர் பரிந்துரைக்கப்பட்டு கோவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை செட்டியக்காபாளையம் ஊராட்சி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Next Story