குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்ததால் பயணிகள் கூச்சலிட்டனர்.
அணைக்கட்டு
கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்ததால் பயணிகள் கூச்சலிட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிழக்கு கிராமத்தில் 6 தெருக்களில் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு அங்குள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அகரம் ஆற்றில் இருந்து பெறப்பட்ட குடிநீரும் வினியோகம் செய்யப்பட்டது. அதற்காக, ஆற்றில் போடப்பட்டு இருந்த ஆழ்துளை கிணறு, நீர் உறிஞ்சும் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
சாலை மறியல்
இந்தநிலையில் கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சி 3 மற்றும் 4-வது வார்டுகளில் மாலை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு வசிக்கும் பலர் தங்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் எனக்கோரி நேற்று காலை 30-க்கும் மேற்பட்ேடார் குடியாத்தம்-ஒடுகத்தூர் சாலையில் காலிக்குடங்களை வைத்து திடீா் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். அப்போது அவர்கள், தங்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி மன்ற தலைவருக்கு கண்டனம் ெதரிவித்தனர்.
ேபச்சு வார்த்தை
தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை, காலையிலேயே குடிநீர் வழங்க வேண்டும், எனக் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரை அழைத்து போலீசார் சம்பவ இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் சார்பில், கணவர் அஸ்லாம் கூறியதாவது:-
ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ்
20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 தெருவில் வசிக்கும் மக்களுக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி அதில் இருந்து அனைவருக்கும் காலை, மாலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து மக்களுக்கும் ஒரே நேரத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டிய பிறகே சீரான குடிநீர் வழங்க முடியும்.
மேலும் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் குடிநீர் வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறத. உடனடியாக இவர்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
கீழ்கிருஷ்ணாபுரம் கிழக்குப் பகுதிக்கு மட்டும் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பயணிகள் கூச்சல்
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் அந்தப் பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சிறை பிடித்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், எனக் கூச்சலிட்டதால் பரபரப்பு ்ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் இருந்து பஸ்சை போலீசார் விடுவித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story