நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த கரடி மீட்பு


நாட்டறம்பள்ளி அருகே  கிணற்றில் விழுந்து தத்தளித்த கரடி மீட்பு
x
தினத்தந்தி 26 March 2022 5:05 PM IST (Updated: 26 March 2022 5:05 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறிவிழுந்து 24 மணி நேரம் தண்ணீரில் தத்தளித்தவாறு தவித்த கரடியை வனத்துறையினர் 6 மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறிவிழுந்து 24 மணி நேரம் தண்ணீரில் தத்தளித்தவாறு தவித்த கரடியை வனத்துறையினர் 6 மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர்.

கிணற்றில் விழுந்தது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரி டேம் அருகே வீரனூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் சண்முகத்துக்கு (வயது 35) காப்புக்காடு பகுதியையொட்டி விவசாய கிணறு உள்ளது. 
கடந்த வியாழக்கிழமை இரவு காப்பு காட்டில் வசித்து வந்த 2 வயது கரடி தண்ணீர் தேடி வெளியேறி வந்தபோது இவரது கிணற்றுக்குள் திடீரென தவறி விழுந்து விட்டது. 

தகவல் அறிந்த வனத்துறையினர் தீயணைப்பு துறையினருடன் விரைந்து சென்று கரடி மீட்க முயற்சி மேற்கொண்டனர். மேலும் அந்த கரடியை மீட்க 40 அடி நீளமுள்ள ஏணி மற்றும் 20 அடி நீளமுள்ள மற்றொரு ஏணி ஆகியவற்றை கிணற்றில் இறக்கினர். ஆனால் அதன் வழியாக கரடி ஏறி மேலே வரவில்லை.

மீட்பு

இரவு 10 மணியளவில் ஓசூர் வனத்துறையினர் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் கரடியை மீட்க முயற்சி செய்தனர். அந்த முயற்சி பலனளிக்காததால் 2 தென்னை மரங்களை கிணற்றில் இறக்கி அதன் வழியாக கரடி வந்து விடும் என வனத்துறையினர் எதிர்பார்த்தனர். அதுவும் தோல்வியடைந்ததால் கரடியை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் ரோப் கயிறை கிணற்றுக்குள் இறக்கி 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கரடியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

அதன் பிறகு அருகில் உள்ள காட்டில் கரடியை விட்டனர். அப்போது காட்டுக்குள் கரடி பாய்ந்து ஓடியது. வெற்றிகரமாக கரடி மீட்கப்பட்டதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.
========

Next Story