கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
தூத்துக்குடியில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனா.
தூத்துக்குடி:
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேஷ் (வயது 21). இவருக்கும், தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த அசன் மகன் ரகுமான் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வெங்கடேஷ் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபம் அருகே நின்றபோது அங்கு வந்த ரகுமான் மற்றும் அவரது நண்பர் குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து வெங்கடேஷிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து ரகுமானை கைது செய்தார்.
Related Tags :
Next Story