கோவில்பட்டி பால் வியாபாரி கொலையில் நெல்லை கோர்ட்டில் 3 பேர் சரண்


கோவில்பட்டி பால் வியாபாரி கொலையில் நெல்லை கோர்ட்டில் 3 பேர் சரண்
x
தினத்தந்தி 26 March 2022 6:43 PM IST (Updated: 26 March 2022 6:43 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பால் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி பால் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக, நெல்ைல கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.

பால் வியாபாரி கொலை
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 50). பால் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் மாலையில் வீரவாஞ்சி நகர் 9-வது தெருவில் உள்ள தனது மாட்டு தொழுவத்தில் உள்ள மாடுகளில் பால் கறப்பதற்காக மோட்டார் சைக்கிளில் மனைவி முத்துப்பேச்சியுடன் சென்றார்.
தொழுவத்தில் மனைவியை இறக்கி விட்டு, மோட்டார் சைக்கிளை நிறுத்தும்போது, அங்கு பதுங்கியிருந்த மர்மநபர்கள் திடீரென்று மணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு  உதயசூரியன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோர்ட்டில் 3 பேர் சரண்
இந்த நிலையில் மணி கொலை வழக்கு தொடர்பாக, வல்லநாடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் இசக்கிமுத்து (24), பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த அருணாசலம் மகன் சுடலைமுத்து (23) மற்றும் 19 வயது வாலிபர் ஆகிய 3 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story