தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாம்
தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாம்
குன்னூர்
சமவெளி பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வறட்சி நிலவி வருகிறது. இது வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தை சுற்றி உள்ள வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 9 காட்டுயானைகள் குன்னூர் வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்து உள்ளன. இவை கடந்த ஒரு வாரமாக ரன்னிமேடு, காட்டேரி, கிளண்டேல் போன்ற பகுதிகளில் முகாமிட்டன. குறிப்பாக தேயிலை தோட்டங்களிலும், சோலைமரக்காடுகளிலும் உலா வந்தன.
இந்த காட்டுயானைகளை விரட்ட வனத்துறையினர் முயன்றனர். ஆனால் அவை திரும்பி செல்லவில்லை. தற்போது குன்னூர் அருகே கரும்பாலம் பகுதியில் உள்ள பில்லிமலை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இதனால் பச்சை தேயிலை பறிக்க தொழிலாளர்கள் செல்லவில்லை. இதன் காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் குடியிருப்புக்கு அருகே காாட்டுயானைகள் வருவதால், தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். அவைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story