பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி சிக்கியது - படகு பறிமுதல்


பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி சிக்கியது - படகு பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2022 7:50 PM IST (Updated: 26 March 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொன்னேரி,  

பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் அடங்கியது கூணங்குப்பம் மீனவ கிராமம் நேற்று அதிகாலை இங்கு இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடலோர பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குனர் சந்தீப்மிட்டல் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அதிரடியாக விரைந்து சென்று பழவேற்காடு ஏரியில் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். 

அப்போது கூணங்குப்பம் மீனவ கிராம பகுதியில் மினி லாரியில் இருந்து படகு ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. படகை சுற்றி வளைத்த கடலோரக் காவல் படையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு படகு, ஒரு மினி லாரி மற்றும் 3 டன் எடை கொண்ட 60 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு காரணமான கூணங்குப்பத்தை சேர்ந்த சுரேந்தர், ஆந்திராவை சேர்ந்த சேகர் ஆகியோரை திருப்பாலைவனம் போலீசில் ஒப்படைத்தனர்.

தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு போலீசார் விரைந்து சென்று 60 மூட்டை ரேஷன் அரிசியை தச்சூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story